ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு சளி மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவ்வப்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அச்செய்திகள் வதந்தி என தேமுதிக சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தேமுதிக சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம் : விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். யாரும் பரப்பவும் வேண்டாம். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.