‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் |
சமீபகாலமாக விஜய் - அஜித் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொள்வது அதிகரித்து வருகிறது. சினிமா ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் விஜய் - அஜித் குறித்த விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்குமாறு சில சினிமா பிரபலங்களும் கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். இப்படியான நிலையில், இயக்குனர் மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சோசியல் மீடியாவில் பலரும் விஷத்தைதான் கக்குகிறார்கள். இது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிடுவது போல் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால் அது குறித்து பேசிக் கொள்வது தவறு இல்லை. ஆனால் விஜய் - அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்கு விஜய் தான் பிடிக்கும், எனக்கு அஜித்தான் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வது கொஞ்சம் கூட சரி இல்லை,'' என்று அந்த பேட்டியில் மணிரத்னம் தெரிவித்து இருக்கிறார்