பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ராஜா ராணி என்ற படத்தில் இயக்குனரான அட்லி, அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். சமீபத்தில் ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கியும் வெற்றி பெற்றார். ராஜா ராணி தொடங்கி ஜவான் படம் வரை அவர் இயக்கிய பல படங்கள் ஏற்கனவே வெளியான சூப்பர் ஹிட் படங்களை காப்பியடித்து இயக்கியதாக தொடர்ந்து அட்லி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அட்லி அளித்துள்ள ஒரு பேட்டியில் இதுபற்றி கூறும்போது, நான் எந்த ஒரு படத்தையும் காப்பி அடித்து படங்கள் இயக்கியதில்லை. ஆனாலும் நான் இயக்கும் படங்கள் ஏற்கனவே வெளியான படங்களின் சாயல்களில் இருப்பதாக கூறுகிறார்கள். என்னை பொருத்தவரை நான் எடுத்துக் கொள்ளும் கதைக்கு தேவையான காட்சிகளை எனது சொந்த கற்பனையிலேயே உருவாக்கி வருகிறேன். இப்படி நான் நேர்மையான முறையில் படங்களை இயக்கிய போதும் எனது ஒவ்வொரு படங்களும் திரைக்கு வரும்போதும் என் மீது திட்டமிட்டு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அட்லி, அடுத்து ஷாருக்கான்- விஜய்யை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான கால நேரம் கைகூடி வரும்போது அந்த படத்தை பிரமாண்டமாக இயக்குவேன். அப்படி நான் இயக்கும் அந்த படம் ஷாரூக்கான் - விஜய் என்ற இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு கதையில் உருவாகும் என்கிறார் இயக்குனர் அட்லி.