நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் '2018'. தற்போது ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.
பெருவெள்ளத்தின் போது மலையாள இளைஞர்கள் எப்படி மனிதாபிமானத்துடன் மதம், ஜாதி தாண்டி செயல்பட்டார்கள் என்பதை மைய கருவாக கொண்ட படம். இதனால் இந்த படத்தை மலையாளிகள் கொண்டாடினார்கள். 200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில்தான் படம் இந்திய அரசு சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வானது. இது மலையாளிகளுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த படத்தை தற்போது ஓடிடியில் பார்க்கலாம் என்றாலும் தென் அமெரிக்காவில் வாழும் மலையாளிகள் படத்தை தியேட்டரில் பார்க்க விரும்புகிறார்கள். இதனால் தென் அமெரிக்காவில் 400 தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இதனை துபாயை சேர்ந்த ஏரீஸ் குழுமத்தின் சினிமா பிரிவு வெளியிடுகிறது.
தற்போது அமெரிக்க சுற்று பயணத்தில் இருக்கும் படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இதுகுறித்து கூறும்போது “உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து ஆதரவும், அன்பும் எங்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி. தென் அமெரிக்காவில் '2018' ரிலீஸ் செய்யப்படுவது இந்திய சினிமாவுக்கே ஒரு மைல் கல்லாக இருக்கும். கலாசாரத்தை கடந்து படம் பேசும் மனிதநேயம் பார்வையாளர்களை ஊக்குவிக்கும். தென் அமெரிக்க பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக இது இருக்கும்” என்றார்.