2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தீபாவளித் திருநாள் இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வழக்கம் போல சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களது தீபாவளிக் கொண்டாட்டப் படங்களை அன்று முதல் இன்னமும் பகிர்ந்து வருகிறார்கள். குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்கள், கணவன், மனைவி கொண்டாடிய புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காதலர்களாக கொண்டாடிய புகைப்படங்களும் இந்த வருடம் பகிரப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருதிஹாசன் மும்பையில் தனது காதலர் சாந்தனு ஹசரிகாவுடன் கொண்டாடிய புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். சாந்தனு பட்டு வேட்டி சட்டையுடனும், ஸ்ருதிஹாசன் அழகான புடவையுடனும் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்கள். மேலும் நண்பர்களுடன் பாட்டுப்பாடி கொண்டாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்கள்.
மற்றொரு நடிகையான பிரியா பவானி சங்கர் அவரது காதலர் ராஜவேல் உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நீதான் என வெளிச்சம். நீதான் எனது வீடு, வெகு தூரத்திலிருந்து எனது அன்பை அனுப்புகிறேன்,” என காதலருக்கு தீபாவளி வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.

எப்போது உங்களுக்குத் திருமணம் என இருவரது பதிவுகளிலும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.