அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இது போன்ற வீடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறை இறங்கி உள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதற்கு டில்லி இணையதள குற்ற காவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், ‛இந்த டீப் பேக் வீடியோ சம்பந்தமாக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், மெட்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து இதை கண்டறியும் தகவல்கள் பெறப்பட்டு தொழில்நுட்ப ஆய்வு நடைபெற்று வருவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.