மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கடந்த வருடம் மிகச்சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் மலையாளத்தில் வாரிக்குவித்த படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'. அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் 'குருவாயூர் அம்பலநடையில்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் கதாநாயகனாக நடித்தவரும் மின்னல் முரளி பட இயக்குனருமான பஷில் ஜோசப் கதாநாயகனாக நடிக்க, மிக முக்கியமான வேடத்தில் நடிகர் பிரித்விராஜ் இதில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் பெரும்பாவூர் பகுதியில் ஒரு மிகப்பெரிய தனியார் இடத்தில் குருவாயூர் கோவில் போன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த இடத்தில் செட் அமைப்பதற்காக முறைப்படி நகராட்சியில் அனுமதி பெறவில்லை எனக் கூறி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதுடன் செட் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த இடத்துக்கு சொந்தக்காரரோ, நகராட்சியில் உள்ள ஒரு சில அதிகாரிகள் தன்மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்று செட் அமைக்கும் பணியை முடக்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.




