ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து தயாரித்துள்ள படம் 'அத்ரிஷ்ய ஜலகங்கள்'. தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்குகிறார். நிமிஷா சஜயன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ரிக்கி கேஜ் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டொவினோ தாமஸ் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சற்று மனநலம் பாதித்தவராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இறந்தவர்களை பேச வைக்க முடியும் என்று நம்பி அதற்காக ஒரு கருவியை கண்டுபிடிக்க முயற்சிப்பவராக நடிக்கிறார். இதன் மூலம் மனித குலம் போரினால் அழிவதையும், போருக்கு எதிரான குரலை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதையும் படம் பேசுகிறது. வரும் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படம் குறித்து இயக்குனர் பிஜுகுமார் தாமோதரன் கூறும்போது “இது போருக்கு எதிரான படம். மேலும், வாழ்க்கை, மரணம், பயம், நம்பிக்கை, உதவியற்ற தன்மை, அன்பு, வெறுப்பு, கனவுகள் போன்ற உணர்ச்சிகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்தும் படம் ஆழமாக பேசும். குறிப்பாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான குரலாக ஒலிக்கும்” என்றார்.