தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

விஜய் நடித்த லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார். ஞானவேல் இயக்கி வரும் தனது 170 வது படத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி அப்படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு அன்பறிவ் சண்டை பயிற்சி கொடுக்கிறார்கள்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி இடத்தில் எனக்கு பிடித்ததே அவர் வில்லத்தனமாக நடித்த படங்கள்தான். அதுபோன்ற கதாபாத்திரங்களில் மாறுபட்ட பர்பாமென்ஸை வெளிப்படுத்துவார். அந்த ரஜினியை நான் ரொம்பவே ரசித்து உள்ளேன். அதனால் ரஜினி 171வது படத்திலும் வில்லத்தனமான ரஜினியை முடிந்தவரை வெளிப்படுத்துவேன். இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு வித்தியாசமான ரஜினியை அதில் கொண்டு வர நான் முயற்சி செய்வேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.




