படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய் படம் என்பதால் வழக்கத்தைவிட கூடுதல் எபோர்ட் போட்டு இந்த படத்திற்கு இசையமைத்து வருவதாக கூறும் யுவன் சங்கர் ராஜா, ‛‛என்னுடைய படங்களில் பாடல்கள் மட்டும் இன்றி பின்னணி இசையிலும் தனி கவனம் செலுத்துவேன்.
குறிப்பாக, அஜித் நடித்த மங்காத்தா படத்தில் பின்னணி இசை அதிகம் கவனிக்கப்பட்டது. அதனால் இந்த விஜய் 68வது படத்திலும் பாடல் மட்டும் இன்றி பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். கண்டிப்பாக மங்காத்தா படத்தின் பின்னணி இசை போலவே விஜய் 68வது படத்திலும் அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய வகையில் பின்னணி இசையை கொடுப்பேன்'' என்கிறார் யுவன் சங்கர் ராஜா.