படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே .சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் தீபாவளி விருந்தாக இன்றைய தினம் வெளியானது. இந்த நிலையில் நேற்று இப்படத்தை பார்த்து விட்ட நடிகர் தனுஷ், தனது சமூக வலைதளத்தில் படத்தை பாராட்டி ஒரு பதிவு போட்டு உள்ளார்.
அதில், ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு. அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்துவது எஸ்.ஜே.சூர்யாவிற்கு வழக்கம் ஆகிவிட்டது. ஒரு நடிகராக லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை இப்படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடங்கள் இந்த படம் உங்கள் இதயத்தை திருடிவிடும். படக் குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார் தனுஷ்.
அவரது இந்த பாராட்டை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உங்களது கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா சுவாமிகளை பிரார்த்திக்கிறேன். நன்றி' என தெரிவித்திருக்கிறார்.