ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கார்த்திக் அம்மாவாக நடித்த கமலா காமேஷின் மகள் உமா. தற்போது இவர் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லன் நடிகர் ரியாஸ்கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது மகன் ஷாரிக் ஹசன். இவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது அவர் ஜிகிரி தோஸ்த் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இதில் அவருடன் அரன், அம்மு அபிராமி, வீஜே.ஆஷிக், பவித்ரா லட்சுமி அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்கிறார், அஸ்வின் விநாயகமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வி.அரண் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
விக்கி, ரிஷி, லோகி என மூன்று நண்பர்கள், பால்ய பருவத்தில் இருந்தே ஒன்றாக திரிகிறவர்கள். ஒருவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும், இன்னொருவருக்கு நடிகராக வேண்டும், இன்னொருவருக்கு ஜாலியா வாழ வேண்டும். இப்படி இருப்பவர்கள் ஒரு நாள் விக்கியின் பிறந்த நாள் அன்று மகாபலிபுரத்துக்கு ஜாலி ட்ரிப் கிளம்புகிறார்கள். அப்போது அவர் செல்லும் பாதையில் சிலர் ஒரு இளம் பெண்ணை கடத்தி செல்வதை காண்கிறார்கள். மூவரும் தங்களது தனித்தனி லட்சியங்களை மறந்து விட்டு அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. என்றார்.