ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர். அப்புச்சி கிராமம், உரியடி, குற்றம் 23, சங்கிலி புங்கிலி கதவதிற, ரங்கூன் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவர் இசை அமைத்த 'சித்தா' படத்தின் பின்னணி இசை பேசப்பட்டு வருகிறது. ஏராளமான தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு இசை அமைத்தாலும் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆடியோ புத்தகம் ஒன்றுக்கு இசை அமைக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “ஆப் மூலம் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வரும் குக்கு எப்எம் நிறுவனம், பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன்பு சோழ தேசத்தை ஆண்ட அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதையை 9 எபிசோடுகளாக, ஆடியோ புத்தக வடிவில் உருவாக்குகிறது. இதை கண்களை மூடிக்கொண்டு கேட்டால், திரைப்படம் பார்ப்பது போல் உணர வைக்கும். இதற்கு நான் இசை அமைக்கிறேன். தமிழில் இது புதிய முயற்சி” என்றார்.




