மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள், வெப் தொடர்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள தெலுங்கு படமான "மை நேம் இஸ் ஸ்ருதி" விரைவில் வெளியாக உள்ளது. தமிழ் படமான "கார்டியன்" படமும் அடுத்து வெளிவருகிறது. தவிர, தெலுங்கில் '105 நிமிடங்கள்' மற்றும் தமிழில் 'மேன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுவும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது.
மேலும் சில புதிய படங்களில் அவர் நடிக்கலாம். அடுத்த ஆண்டு அதிக படங்கள் நடித்த, நடிகைகள் பட்டியலில் ஹன்சிகாவுக்கு இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது "எனது ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற அன்பு மற்றும் ஆதரவால் நான் உண்மையிலேயே தாழ்மையுடன் இருக்கிறேன். 'மை நேம் இஸ் ஸ்ருதி' மற்றும் 'கார்டியன்' எனக்கு மிகவும் சிறப்பு. அடுத்த ஆண்டு ஹன்சிகா ஆண்டாக இருக்கும்” என்றார்.