ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

1997ம் ஆண்டு வெளிவந்த படம் 'அருணாச்சலம்'. ரஜினி, சவுந்தர்யா, ரம்பா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுந்தர்.சி இயக்கி இருந்தார். இந்த படத்தின் ஒன் லைனே 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் வேண்டும் என்றால் 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்து காட்ட வேண்டும் என்ற நிபந்தனை நாயகனுக்கு விதிக்கப்படுவதுதான்.
இதே கதைதான் 1954ம் ஆண்டு வெளிவந்த 'பணம் படுத்தும் பாடு' என்ற படத்தின் கதையும். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படத்தில் என்.டி.ராமராவ், சவுகார் ஜானகி, யமுனா நடித்திருந்தார். என்.டி.ராமராவ் பணக்கார பெண்ணான யமுனாவை காதலிப்பார். அந்த காதலை ஏற்றுக் கொள்ள யமுனாவின் தந்தை என்.டி.ராமராவுக்கு பணம் படுத்தும் பாட்டை தெரிந்த கொள்ள ஒரு பரீட்சை வைப்பார். ஒரு லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் செலவு செய்து காட்ட வேண்டும். நன்கொடையோ, அல்லது வீணான செலவோ செய்யக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
இந்த இரண்டு கதையுமே ஜார்ஜ் பார் மெக்கட்சியோனின் ப்ரூஸ்டர்ஸ் மில்லியன்ஸ் (1902) நாவலை அடிப்படையாகக் கொண்டது .