தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அரை குறை ஆபாச ஆடையுடன் இருப்பது போன்று போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். பிரபலங்களின் முகத்தை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்தனர். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் போலி வீடியோ குறித்து ராஷ்மிகா, தனது ‛எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆன்லைனில் என்னை போலியாக சித்தரித்து பரபரப்படும் வீடியோவை பற்றி மிகவும் வேதனையுடன் இதனை பகிர்கிறேன். தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கையில், எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரும் பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும் இருக்கும் எனக்கு ஆதரவாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால், இதனை எப்படி சமாளித்திருப்பேன் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பு, இது குறித்து தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




