சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
1987ம் ஆண்டு நாயகன் படத்தில் இணைந்த கமலும், மணிரத்னமும் தற்போது கமலின் 234வது படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள். 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர்கள் இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு அப்படத்தின் டைட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிமுக வீடியோவில், 'தக் லைப்' (Thug Life) என படத்திற்கு தலைப்பிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ''என் பேரு ரங்கராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரன்” என தனக்கே உரிய ஸ்டைலில் கமல் இன்ட்ரோ கொடுத்துள்ளார். வீடியோவில் கமலின் ஆக்ஷன் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் முன்பு வெளிவந்த 'நாயகன்' படத்திலும் கமல் கேரக்டரின் பெயர் சக்திவேல் நாயக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலையும் படக்குழு வெளியிட்டது. அதன்படி, மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி, நடிகை திரிஷா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.