அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூப் தளத்தில் வெளியானது. அந்த வீடியோ தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
தமிழ் வீடியோவிற்கு தமிழில் 98 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. விரைவில் ஒரு கோடியை நெருங்கிவிடும். அதற்கடுத்து தெலுங்கில் 19 லட்சம், ஹிந்தியில் 14 லட்சம், கன்னடத்தில் 2 லட்சம், மலையாளத்தில் 1.8 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. பான் இந்தியா படமாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் வீடியோவிற்கு தமிழில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் மற்ற மொழிகளில் குறைவான அளவே சென்றடைந்திருக்கிறது.
தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி நட்சத்திரங்களும் இப்படத்தில் இருக்கிறார்கள். ஷங்கர் இயக்கம், அனிருத் இசை, கமல்ஹாசன் என இந்தப் புதிய கூட்டணிக்கு வீடியோவிற்குப் பிறகு கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருகிறது. 'இந்தியன்' படத்தின் முதல் பாகத்தின் பெரும் வெற்றிக்கு ஏஆர் ரஹ்மான் இசையும் ஒரு முக்கிய காரணம். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங் என ரசிகர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இதனால், ஏஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கும், அனிருத் ரசிகர்களுக்கும் இடையே புதிதாக சண்டை ஆரம்பமாகி நடந்து வருகிறது.