டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்களில் கமல்ஹாசன் மட்டும்தான் அடிக்கடி ஏதாவது பதிவுகளைப் பதிவிடுவார். மற்றவர்கள் எப்போதோ ஒரு முறைதான் இந்தப் பக்கம் வருவார்கள். அல்லது அவர்கள் படங்கள் வெளியாகும் போது புரமோஷனுக்காக வந்து போவார்கள்.
இன்ஸ்டாகிராமிலும் கணக்கு வைத்துள்ள விஜய் அடிக்கடி அந்தப் பக்கம் வர மாட்டார். கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு 'லியோ' டிரைலர் பற்றிய பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்குப் பிறகு நேற்று 'லியோ சக்சஸ் மீட்' என மட்டும் பதிவிட்டு அந்நிகழ்வின் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். நெற்றியில் குங்குமப் பொட்டு, லேசான நரைத்த தாடியுடன் விஜய் இருக்கும் அந்தப் புகைப்படங்களுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் லைக்குகளை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
விஜய் எப்போதோ ஒரு முறை வந்து பதிவிட்டாலும் அவற்றிற்கு லைக்குகள் அதிகமாகவே கிடைக்கும். 31 வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் தளத்தில் முதல் முறையாக வந்த போது அவர் பதிவிட்ட பதிவிற்கு 92 லட்சம் லைக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதன் பின் அவர் பதிவிட்ட ஆறேழு பதிவுகளுக்கும் 25 லட்சங்களுக்கு மேல் லைக்குகள் என்பது சர்வசாதாரணமாக கிடைத்துள்ளது.