சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

4 வருடங்களுக்கு முன்பு 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த அனு இம்மானுவேல் தற்போது கார்த்தி ஜோடியாக 'ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கி உள்ளார். ஜீ.பி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். வருகிற 10ம் தேதி படம் வெளிவருகிறது.
படத்தில் நடித்தது பற்றி அனு இம்மானுவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொதுவாக நான் எண்ணிக்கைக்காக படங்களில் நடிப்பதில்லை. தேர்ந்தெடுத்த படங்களிலேயே நடிக்கிறேன். இந்த படத்தின் வாய்ப்பு வருவதற்கு முன்பே ராஜூ முருகனின் படங்களை பார்த்திருக்கிறேன். அவரது படங்களில் நாயகிகளுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும். அதனால் ஒப்புக் கொண்டேன். அதோடு கார்த்தி பற்றிய நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தயாரிப்பு நிறுவனம் பெரியது என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
வழக்கமான ஒரு ஹீரோயின் கதாபாத்திரமல்ல இதில். கதைப்படி நானும், கார்த்தியும் காதலர்கள்தான் ஆனால் அது வழக்கமான ஒரு காதலாக இருக்காது. அது வேறு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும். என்னை சுற்றித்தான் கதை நடக்கிறது. கார்த்தியுடன் நடித்தது நல்ல அனுபவம், அமைதியானவர், தனது வேலையில் சரியாக இருப்பார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவார். சினிமாவின் எல்லா துறைகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார். ஜப்பான் படம் தமிழில் எனக்கு நல்ல திருப்பம் தரும். இனி அடிக்கடி என்னை தமிழ் படங்களில் பார்க்கலாம். என்றார்.




