ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமா உலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. அவரது திரையுலகப் பயணத்தில் இடையில் கொஞ்சம் வேகத் தடை வந்தாலும் '96' படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் வந்த 'பொன்னியின் செல்வன்' அவருக்கு இன்னும் பெயரைப் பெற்றுத் தந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் ஜோடியாக 'லியோ' படத்திலும் நடித்தார்.
அப்படத்தின் வெற்றி விழா நேற்று டிவியில் ஒளிபரப்பானது. அதை முன்னிட்டு அவர் நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த விழாவில் விஜய்யுடன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து சில எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். “ரோஜாப்பூ இருக்கும் ஒரு கை, கண், இன்பினிட்டி (முடிவில்லாத)” ஆகிய எமோஜிக்கள்தான் அவை.
அந்த புகைப்படமும், பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் அவரவர் கற்பனைகளுக்கு பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீப காலங்களில் சில கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷாவின் இந்தப் பதிவு அதிகம் கவனிக்கப்படுகிறது.




