காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழ் சினிமாவில் இத்தனை வயதில் இப்படி சாதனைகளா என ஆச்சரியப்பட வைக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். ரஜினிகாந்த் தற்போது “லால் சலாம், ரஜினிகாந்த் 170” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்த வருடம் ரஜினிகாந்த் 171 ஆரம்பமாக உள்ளது.
ரஜினியைப் போலவே கமல்ஹாசனும் சில பல படங்களைக் கையில் வைத்துள்ளார். “இந்தியன் 2, கமல்ஹாசன் 233, கமல்ஹாசன் 234, கல்கி 2898 எடி” ஆகிய படங்கள் அவர் வசம் உள்ளன. வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு அவருடைய படங்களின் அப்டேட்கள் வெளியாக உள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் “இந்தியன் 2 - ஓர் அறிமுகம்” என்ற வீடியோ நவம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 233வது படத்தின் படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அப்டேட்டும், நாக் அஷ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898' படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திர போஸ்டரும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.