ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
''கனவுல கூட நான் நினைத்து பார்க்கவில்லை, நடிகர் ஆவேன் என்று. 35 வயதில் அரிதாரம் பூச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சினிமாவில் என் 'ரூட்' கிளியர்' என நம்புகிறேன்'' என நம்பிக்கையுடன் இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த நடிகர் கணேஷ் கோபிநாத். இவர் திரிஷா நடித்து சமீபத்தில் வெளியான 'தி ரோடு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒருபுறம் சினிமா, மறுபுறம் ஐ.டி., வேலை என 'பிஸி'யாக இருக்கும் அவரை சண்டே ஸ்பெஷலுக்காக சந்தித்தோம்.
''நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. மதுரை காமராஜ் பல்கலையில் படித்துவிட்டு சென்னை ஐ.டி., வேலையில் சேர்ந்தேன். சிறு வயதில் பள்ளி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். 'நீ கலராக இருப்பதால் சினிமாவில் நடிக்கலாம்' என என்னை உசுப்பேற்றினர். அதுபற்றி எனக்கு அந்த வயதில் எந்த கனவும் இல்லை. எனக்குள் நடிக்கும் ஆசை இருப்பது 2011ல்தான் தெரிந்தது.
சென்னையில் 4 ஆண்டுகளாக ஐ.டி., வேலை பார்த்துக்கொண்டிருந்த போது விகடனில் புது சீரியலுக்கு நடிகர்கள் தேவை அறிவிப்பு வந்தது. சரி, பார்ப்போம் என பங்கேற்றேன். 3 ஆயிரம் பேர் ஆடிஷனில் பங்கேற்றனர். நம்மை எங்கே கூப்பிட போகிறார்கள் என வெளிநாடு வேலைக்கு தயாரானபோது, அழைப்பு வந்தது. 3 ஆயிரம் பேரில் 30 பேரை இறுதி செய்ததில் நானும் ஒருவன். பிறகு 3 பேரை தேர்வு செய்ததில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
வெளிநாட்டிற்கு எப்ப வேண்டுமானாலும் வேலைக்கு போகலாம் என முடிவு செய்து நடிக்க ஆரம்பித்தேன். ஒரே சீரியலில் 4 ஆண்டுகளாக நடித்தேன். ஒரு கட்டத்தில் போரடித்தது. சீரியல் இயக்குநர் ரவி, 'சினிமாவில் விதவிதமான கேரக்டரில் நடிக்க முடியும். போரடிக்காது' என்றார். 2015 முதல் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். விளம்பரங்களில் நடித்தேன். 2019ல் வெப் சீரியல் ஒன்றில் காமெடி கேரக்டரில் நடித்தேன். கொரோனாவால் 'ரிலீஸ்' ஆகவில்லை.இச்சூழலில் மதுரையில் ஐ.டி., வேலை கிடைத்து குடும்பத்துடன் வந்தேன். இங்கு வேலை செய்து கொண்டிருக்கும்போது திரிஷா நடித்த 'தி ரோடு' பட வாய்ப்பு கிடைத்தது.
நல்லவரை கூடவே இருந்து வில்லனாக மாற்றும் கேரக்டர். முக்கிய கேரக்டரை இயக்குநர் அருண் வசீகரன் என்னை நம்பி தந்தார். நடித்ததோடு, புரொடக் ஷன், திரிஷாவுக்கு வசனம் சொல்லித்தரும் வேலைகளையும் செய்தேன். இந்த பட ஷூட்டிங் மதுரை அழகர்கோவில் பகுதியில் எடுக்கப்பட்டது. படத்தை பார்த்த நண்பர்கள், சக கலைஞர்கள் நான் கேரக்டராகவே மாறிவிட்டதாக பாராட்டினர். அடுத்தடுத்து வாய்ப்பு வர ஆரம்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தது போல் நானும் பிடிக்க வேண்டும் என்று 'பிடி'யுடன் ஓடிக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறினார்.
இவரை வாழ்த்த 98943 66567