''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஸ்டன்ட் மாஸ்டர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் என சினிமாவில் சகல கலா வல்லவராக திகழும் இவர் இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். 72 வயதில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பது இவரது சினிமா பயணத்துக்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது. இவர் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் 72. தான் கதாநாயகனாக அறிமுகமாகும் ஜாகுவார் படத்தின் திரைக்கதை விவாதத்தில் பிஸியாக இருந்தவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
கொரோனா காலத்திற்கு பிறகு சினிமா உலகம் கடினமான நிலையில் தான் உள்ளது. பெரிய நடிகர்களை தவிர மற்ற யாரும் தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த தயாரில்லை. இதனால் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை இல்லாததுடன் சினிமா சார்ந்த பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக்கு இங்கு கூட்டம் கூடுவதாக காரணம் சொல்லப்படுகிறது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., படப்பிடிப்புக்கு கூடாத கூட்டமா இவர்களுக்கு கூடப்போகிறது. எம்.ஜி.ஆர்., எல்லா படங்களையும் தமிழகத்தில் நடத்த வேண்டும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பார்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை வடஇந்திய சினிமாக்கள் கூட அமிதாப், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் சென்னையில் படப்பிடிப்புகளை நடத்தியுள்ளனர். என் சண்டை காட்சிகள் அவர்களது படங்களில் இடம் பெற்றுள்ளன.
கூட்டம் சேருவதை தவிர்க்க செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த போதிய இடவசதிகள், தனியார் பாதுகாவலர் இங்கு உண்டு. என்ன காரணமோ தெரியவில்லை. பெரிய நடிகர்களின் படப்பிடிப்புகள் இங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது. சினிமாவுடன் தொடர்புடைய நேரடி, மறைமுக தொழிலாளர்களுக்கு பாதிப்பு தான்.
இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மட்டுமின்றி ஜப்பான், ரஷ்யா, கொரியா மொழி என 2000க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளேன். சிறிய வயதில் சிலம்பம் உள்ளிட்ட மல்யுத்த கலைகளை கற்று பரிசுகளை பெற்றுள்ளேன். அந்த கலை தான் சினிமா வாய்ப்புகளை பெற்று தந்தது.
நான் தயாரித்த சூர்யா படம் படுஹிட் ஆனது. அடுத்து பேய் படம் ஒன்றை எடுத்தேன். வருவாய் ரீதியாக சரியாக போகவில்லை. தற்போது மகன் விஜய் ஜாகுவாரை வைத்து இந்தியா என்ற படத்தை எடுத்துள்ளேன். என் 72 வயதில் முதல் முறையாக ஜாகுவார் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க கதை விவாதம் போய் கொண்டுள்ளது. இந்த வயதில் கதாநாயகனாக அறிமுகமாவது நான் ஒருவனாக தான் இருப்பேன். சிலம்பாட்டத்தை மையப்படுத்தி இக்கதை இருக்கும். நடிக்க போனாலும் ஸ்டன்ட் மாஸ்டராகவும் இருப்பேன். மலையாள படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளேன்.
எம்.ஜி.ஆர்., சினிமாக்களில் சிலம்பம், மான் கொம்பு, செடி குச்சி ஆட்டம், சுருள் வீச்சு, கத்தி, வாள் சண்டை காட்சிகள் இடம் பெறுவது போலபார்த்து கொள்வார். அதை சினிமாவில் பார்க்கும் போது அந்த கலைகள் மீது நமக்கு ஒரு பிடிப்பு ஏற்படும். நான் கூட எம்.ஜி.ஆர்., செய்த சிலம்பாட்டம், செடி குச்சி ஆட்டத்தை பார்த்து சண்டை பயிற்சி கற்று கொள்ள துவங்கினேன். சிவாஜி, ஜெய்சங்கர் கால சினிமாக்களில் இயற்கையாக சண்டை காட்சிகள் அமைந்தன. தற்போது செயற்கையாக இருப்பதாக கருத்து உள்ளது. அதை தவிர்க்க முடியாது. நவீன தொழில் நுட்ப யுகத்திற்கு ஏற்ப சண்டை காட்சிகளில் கிராபிக்ஸ் இடம் பெறுவதும் தவிர்க்க முடியாதது.
எட்டு தமிழ் படங்களில் சிறந்த ஸ்டன்ட் காட்சிகளுக்காக தமிழக அரசின் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளேன். உள்ளூர், தேசிய, உலக அளவில் 17 ஆயிரம் விருதுகள் வரை பெற்றுள்ளேன். பிலிம், டெலிவிஷன், புரடியூஸர்ஸ் கில்டு ஆப் சவுத் இந்தியா தலைவராகவும் பத்தாண்டுகளாக தொடர்கிறேன். சினிமா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறேன் என்றார்.