2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தென்னிந்திய சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் விஜயசாந்தி. இன்றைக்கும் 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படம் ஒரு மைல் ஸ்டோனாக கருதப்படுகிறது. அதன்பிறகும் பல ஆக்ஷன் படங்களில் நடித்தார். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயசாந்தி சினிமாவில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகிறது.
இதையொட்டி அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: சினிமாவில் என்னை பாரதிராஜா 1979ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு தெலுங்கிலும் கிருஷ்ணா ஜோடியாக நடித்தேன். அந்த காலத்திலேயே ஹீரோக்களுக்கு இணையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது நான்தான். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தேன். சண்டை காட்சிகளில் ஹீரோவுக்கு சமமாக நடித்ததால் ரசிகர்கள் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைத்து என்னை பெருமைப்படுத்தினர்.
நான் நடித்த 'ஒசே ராமுலம்மா' படம்தான் எனக்கு மிகவும் பிடித்த படம். தெலுங்கானாவில் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் புரட்சி பெண்ணாக நடித்தேன். இப்போதுகூட என்னை தெலுங்கானாவில் ராமுலம்மா என்று அழைக்கிறார்கள். என்னை இந்த அளவிற்கு பெருமைப்படுத்திய ரசிகர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.