ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த அன்னபூரணி படம் வெளியானது. நயன்தாரா அளித்த பேட்டியில், ‛‛தயவு செய்து என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். அப்படி சொன்னால் பலரும் திட்டுகிறார்கள். என்னுடைய அனுமதி இல்லாமல் எதுவுமே போகக்கூடாது என்று சொல்கிறேன். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்று என்னிடம் சொல்லாமலேயே போட்டு விடுகிறார்கள்.
இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா? இல்லை பெண்ணாக இருப்பதினால் அப்படி ஒரு பட்டம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை அந்த பட்டத்தை குறிப்பிடும் போதும் ஒரு பத்து பேர் பெருமையாக சொன்னால், 50 பேர் என்னை திட்டுகிறார்கள். என்னுடைய பயணமும் அந்த பட்டத்தை நோக்கி கிடையாது. அந்த பட்டம் எல்லோருமே எனக்கு கொடுத்துள்ள அன்பு. நான் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டாம் என்று சொன்னாலும் யாருமே கேட்பதில்லை. இந்த அன்பினால்தான் அது கிடைத்தது'' என்றார்.