வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 | தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை |

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் 50 வயது, 25 வயது என இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடித்தார்கள். அதையடுத்து தற்போது ஒரு சண்டைக்காட்சியை படமாக்குவதற்காக விஜய் 68வது படக்குழு தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. அங்கு விஜய்யுடன் வில்லன்கள் மோதும் ஒரு அதிரடியான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் டைட்டிலை வெளியிடுவதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.