ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தி, தெலுங்கு படங்களில் கவர்ச்சி புயலாகியிருக்கும் காஜல்அகர்வால், தமிழைப்பொறுத்தவரை ரொம்ப அடக்கிவாசிக்கிறார். அவரைப்பொறுத்தவரை தமிழக ரசிகர்கள் ரொம்ப டீசன்டானவர்கள். நடிகைகள் அளவான ஆடைகுறைப்பு செய்வதுதான் அவர்களுக்கு பிடிக்கும். ஓவர்டோஸ் கொடுக்கும் நடிகைகளை ஓரிரு படங்களிலேயே ஓரங்கட்டி விடுவார்கள் என்று கணித்து வைத்திருக்கிறார். அதனால் இயக்குனர்கள் பாடல் காட்சிகளில் கொஞ்சம் தூக்கலான கிளாமரை வெளிப்படுத்தலாமே என்று சொன்னால், தமிழ் ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள், அவர்களோடு நான் ஒத்துப்போகவே நினைக்கிறேன் என முந்திக்கொண்டு சொல்லி, அவர்களின் ஆசைக்கு அணை போட்டு விடுகிறார்.
ஆனால் இந்தி, தெலுங்கில் அப்படியல்ல. படத்துக்குப்படம் கவர்ச்சி மழை பொழிந்து வருகிறார். அதிலும் தெலுங்கைப்பொறுத்தவரை அயிட்டம் நடிகைகளே அலறிக்கொண்டு ஓடும் அளவுக்கு உச்சக்கட்டத்தை நெருங்கி விடுகிறார் காஜல். அப்படி அவர் சுமந்துக்கு ஜோடியாக நடித்த பவகுடு என்ற படம் தற்போது தமிழுக்கு ஓ என்ற பெயரில் டப்பாகிறது. இந்த சேதியைக்கேட்ட காஜல், அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார். காரணம், இப்படத்தில் பாடல் காட்சிகளை துக்கடா டிரஸ்களில் இளவட்ட ரசிகர்களை துவம்சம் செய்யும் வகையில் நடித்திருக்கிறாராம். ஆனால் அந்த கோலத்தில் தன்னை தமிழ் ரசிகர்கள் பார்த்தால் தனது மரியாதை போய்விடும் என்று நினைக்கிறாராம். அதனால் அப்படத்தை ரிலீஸ் செய்யும் படாதிபதியை தொடர்பு கொண்டு பாடல்களில் ஓவர் கிளாமராக இருககும் காட்சிகளில் கத்திரி வைக்குமாறு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளாராம் காஜல்.