பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியாலயா அறிமுகமாகிறார். நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் பாடல்களை எழுத, டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.