இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த், சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், மன்சூரலிகான் மற்றும் பலர் நடித்து 1991ம் வருடம் வெளிவந்த படம் 'கேப்டன் பிரபாகரன்'. சந்தனக் கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து வெளிவந்த பரபரப்பான ஆக்ஷன் படம். அந்தக் காலத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு படம்.
அப்படத்தை இந்த வருட விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சில தினங்கள் முன்னதாகவே ஆகஸ்ட் 22ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்கள். இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் மன்சூரலிகான் மற்றும் இயக்குனர்கள் எஸ்ஏ சந்திரசேகரன், விக்ரமன், ஏஆர் முருகதாஸ், லிங்குசாமி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
4கே தரத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய டிரைலர் தியேட்டரில் திரையிடப்பட்டது. யு டியுப் தளத்திலும் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். புதிய படங்களுக்கு எப்படி ஒரு டிரைலர் வெளியாகுமோ அப்படியான தொகுப்புடன் டிரைலரை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் டிரைலர் உள்ளது.
யு டியூப் தளத்தில் டிரைலரின் கமெண்ட் பகுதியில் ''புஷ்பா' படத்தை விட இந்தப் படம் 1000 மடங்கு நல்லா இருக்கும்” என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளதற்கு அதிக லைக்குகள் கிடைத்துள்ளன. அதே காடு, அதே மரக் கடத்தல். 'புஷ்பா' படங்களுக்கெல்லாம் இந்தப் படம்தான் இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கும்.