அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து அடுத்த வாரம் வெளிவர உள்ள படம் 'லியோ'. இப்படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சி, காலை சிறப்புக் காட்சி ஆகியவை வேண்டுமென தயாரிப்பு நிறுவனமும் மற்றவர்களும் எதற்காக கோரிக்கை வைத்தனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதனால், சிறப்புக் காட்சிகளை நடத்தி அவற்றின் முன்பதிவு மூலம் வசூல் செய்தால்தான் படத்தின் அசல் தொகையையாவது திரும்பப் பெற முடியும். மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு 'லியோ' வசூலித்தது, சாதனை புரிந்தது என்ற செய்திகளையும் பரப்புவதற்காக தற்போது டிக்கெட் கட்டணங்களை நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது.
முதல் நாள் முதல் காட்சி கட்டணமாக சென்னையில் 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கேட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மற்ற நகரங்களில் 1000 ரூபாய் வரை கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை விட ரசிகர் மன்றக் காட்சி என இப்படி 'காலை கொள்ளை' அடிப்பதற்கு அரசு நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் சிலர் பேசி வருகிறார்கள். மற்ற கொள்ளைகளைப் பற்றி படங்களில் வாய் கிழிய வசனம் பேசும் ஹீரோக்கள் அவர்களது படங்களுக்கான டிக்கெட் கட்டணக் கொள்ளையைப் பற்றி வாயைத் திறக்க மறுக்கிறார்கள் என்றும் பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.