பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் மீரா சில நாட்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து விஜய் ஆண்டனி குடும்பம் மீளமுடியாமல் தவிக்கிறது. அண்மையில் நடந்த 'ரத்தம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்குகூட தனது இளைய மகள் லாராவுடன் வந்தார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் “ எங்களுடன் நீ 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும், நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா. லாரா (தங்கை) உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். லவ் யூ தங்கம்” என பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவு படிப்பவர்களை கலங்கை வைக்கிறது.