23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கம், தயாரிப்பில் உருவாகும் படம் 'ஜிகர்தண்டா 2 - டபுள் எக்ஸ்'. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், ஷான் டாம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது: கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ், ஜிகிர்தண்டா கதை சொன்னார்கள். அப்போது தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப் படத்தை என்னால் செய்ய முடியவில்லை. அந்த படத்தை பார்த்த பிறகு நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அந்த படத்தை தொலைக்காட்சியில் பார்த்தாலும் அந்த வருத்தம் இருக்கும். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்புதான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 20 கோடியில் தயாரிக்கப்பட்டட படத்தை மிஸ் பண்ணிவிட்டு 100 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் நடித்திருக்கிறேன். ஆங்கிலப் படத்துக்கு இணையாக படத்தை இயக்கியிருக்கார் கார்த்திக் சுப்பராஜ்.
என்னோட ரசிகர்கள் எல்லோரும் என்னிடம் 'எங்களை இசைவெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். நான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன். உங்களுடைய நேரத்தை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எந்த ஆடியோ நிகழ்ச்சிக்கும் வர வேண்டாம். அந்த பணத்தை அப்பா - அம்மாவுக்கு செலவு செய்யுங்கள். நேரத்தை வேலைக்கு செலவு செய்யுங்கள். நீங்கள் பணம் கொடுத்து படம் பார்ப்பதே எங்களுக்கு செய்யும் பெரும் உதவி. நான் எப்போதும் உங்களை கூப்பிட மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.