படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! |
நடிகை ஹனி ரோஸ் மலையாள சினிமா மூலம் அறிமுகமானாலும் தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் போட்டோ ஷூட் மூலம் தனது கவனத்தை ஈர்த்தவர். இப்போது எங்கு ஷோ ரூம் திறப்பு விழா என்றாலும் ஹனி ரோஸை அழைக்கின்றனர்.
சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீரசிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். தற்போது விஷ்வாக் சென் நடித்து வரும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்தில் ஒரு பாடல் காட்சி ஒன்றிற்கு நடிகை ஹனி ரோஸை நடனம் ஆட வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறும் என்கிறார்கள்.