ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி | பிரதமர் அணிவித்த சால்வை : இளம் பாடகி ஸ்ரீநிதா நெகிழ்ச்சி | மக்கள் மனங்களை வென்ற மாமன் : நடிகர் சூரியின் நெகிழ்ச்சி பேட்டி | மகனுக்காக இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா : ரஜினியின் நெகிழ்ச்சி பதிவு | கோமாதா என் குலமாதா, பாகுபலி 2, கட்டா குஸ்தி : ஞாயிறு திரைப்படங்கள் | தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? |
விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
நான்கு மொழிகளிலும் சேர்த்து தற்போது 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது இந்த டிரைலர். தமிழில் 36 மில்லியன், ஹிந்தியில் 9 மில்லியன், தெலுங்கில் 6 மில்லியன், கன்னடத்தில் 7 லட்சம் என இப்படத்திற்கு மொத்தமாக 51 மில்லியன் பார்வைகள் இரண்டே நாட்களில் கிடைத்துள்ளது. தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எதிர்பார்த்ததை விடவும் வரவேற்பு அதிகமாகி உள்ளது.
விஜய் பட டிரைலர்களில் இதுவரையில் வந்த படங்களில் 'பீஸ்ட்' டிரைலர் 63 மில்லியன்களைப் பெற்று அவரது படங்களின் டிரைலர்களின் பார்வையில் முதலிடத்தில் உள்ளது. அதே சமயம் அஜித் நடித்துள்ள 'துணிவு' டிரைலர் 66 மில்லியன் பார்வைகளுடன் தமிழ்ப் படங்களின் டிரைலர்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை 'லியோ' முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடத்தில் உள்ளது.