டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கூலி'. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருவதையொட்டி இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் லோகேஷ் திவீரமாக ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் லோகேஷ் அவர் படித்த கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியின் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் கூறுகையில், "2003 - 2006 காலகட்டத்தில், கல்லூரியில் படிக்கும்போது, நாங்கள் பார்த்த பெரும்பாலான படங்கள் சூர்யா சாரின் படங்கள் தான். நான் சூர்யா சாருடன் பணிபுரிய விரும்புகிறேன். இருவருக்கும் சரியான நேரம் அமையும்போது நிச்சயம் சூர்யா சாரை வைத்து படம் இயக்குவேன்.” எனக் கூறி சூர்யா ரசிகர்களைக் குஷி செய்துள்ளார்.