திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

'புது புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தாரா. உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், அர்ச்சனா ஐபிஎஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் சித்தாரா 'சன்னிதானம் பி.ஓ (போஸ்ட்)' என்கிற படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக நடிக்கிறார். சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது.
அறிமுக இயக்குநர் அமுதாசாரதி இயக்குகிறார். யோகி பாபுவுடன் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்ஷா விஸ்வநாத், மேனகா சுரேஷ், மூணார் ரமேஷ், வினோத் சாகர் மற்றும் அஸ்வின் ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் அமுதாசாரதி கூறும்போது, "சிறுவயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து 'சன்னிதானம் பி.ஓ' சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக யோகி பாபுவும் நடிக்கின்றனர். மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி நடிக்கிறார். சபரிமலை பின்னணியில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு நடந்து வருகிறது," என்றார்.




