ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளவர் அனில். மம்முட்டி நடித்த 7 படங்களை இயக்கி உள்ளார். அனில் தமிழில் இயக்கி உள்ள படம், 'சாயாவனம்'. தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரித்து வில்லனாக நடிக்கிறார். சவுந்தரராஜா, தேவானந்தா, அப்புக்குட்டி, ஜானகி, வெற்றிவேல் ராஜா, மேத்யூ மம்ப்ரா நடிக்கின்றனர். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பொலி வர்கீஸ் பாடல்களுக்கு இசை அமைக்கிறார். எல்.வி.முத்து கணேஷ் பின்னணி இசை அமைக்கிறார்.
படம் குறித்து அனில் கூறுகையில் ‛‛வருடம் முழுவதும் அதிக மழை பொழியும் அடர்ந்த வனம் சூழ்ந்த ஒரு கிராமத்தில், புது மணப்பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை 'சாயாவனம்' படம் விவரிக்கிறது. இத்தலைப்புக்கு 'அடர்ந்த காடு' என்று பொருள் இருக்கிறது. இது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் குணத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கேரக்டரும் காடு போல் அடர்த்தியானது. அவர்களிடம் பல்வேறு ரகசியங்கள் மறைந்துள்ளன.
திருமணம் நடந்த அன்றே கணவன் காணாமல் போகிறான். தனித்துவிடப்படும் அவள் அந்த மலைகிராமத்தில் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கிறாள், தன் கணவனை அவள் கண்டுபிடித்தாளா? அவனுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் திரைக்கதை. முழு படமும் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் சிரபுஞ்சியில் படமாகியுள்ளது'' என்றார்.




