இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அரவிந்த்சாமி என்ன பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் தற்போது சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவ் என்ற இரட்டையர் இணைந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு விஜய்யின் பீஸ்ட், லியோ போன்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார்கள். அந்த வகையில் மூன்றாவது முறையாக இவர்கள் விஜய்யின் 68 வது படத்திலும் தற்போது இணைந்துள்ளார்கள். அக்டோபர் இரண்டாம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், நவம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.