மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் ‛வெப்பம், ஓகே கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைகோ, திருச்சிற்றம்பலம்'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‛‛தெலுங்கு சினிமாவில் இதுவரை எனக்கு எந்த பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால் தமிழில் நிறைய பிரச்னைகளை சந்தித்தேன். படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ ஒருவர் என்னை துன்புறுத்தினார்'' என கூறியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. அதேசமயம் எந்த ஹீரோ என நித்யா மேனன் குறிப்பிடாததால் தமிழில் அவர் நடித்த படங்களின் ஹீரோக்களை பட்டியலிட்டு யாராக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுபற்றி நித்யா மேனனை தொடர்பு கொண்டு பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ‛‛அதுபோன்று ஒருபோதும் நான் எதுவும் சொல்லவில்லை, தவறான தகவல்'' என விளக்கம் அளித்துள்ளார்.