பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் |
‛லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த்சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்வு அடுத்த மாதம் அக்டோபர் 2ம் தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படம் வெளிவந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.