பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' |

பாலிவுட் சினிமா இரு ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சமயத்தில் இந்தாண்டு துவக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த ‛பதான்' படம் வெற்றி பெற்று, ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தது. இதனால் பாலிவுட்டிற்கு மீண்டும் ஒரு புது தெம்பை தந்தார் ஷாரூக்கான்.
இந்நிலையில் செப்., 7ல் ஷாரூக்கானின் மற்றொரு படமான ‛ஜவான்' வெளியானது. தமிழ் இயக்குனர் அட்லி இயக்க நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடித்தனர். அனிருத் இசையமைத்தார். அதிரடி ஆக் ஷன் கதையில் வெளியான இந்த படம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தது.
இப்போது 17 நாட்களில் ரூ.1004 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதிலும் ஹிந்தியிலும் மட்டும் 500 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூலை தந்த ஹீரோவாக உருவெடுத்துள்ளார் ஷாரூக்கான்.