ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடாவுக்கு முன் ஜாமீன் | நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் சிறை செல்ல காரணமாக இருந்த இயக்குநர் மரணம் | விக்ரம் 63வது படத்தின் அறிவிப்பு வெளியானது | சினிமா வேறு, குடும்ப வாழ்க்கை வேறு… : நிரூபித்த நடிகைகள் | 2வது திருமணம் பற்றி சூசமாக தகவல் வெளியிட்ட சமந்தா | சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை |
சென்னை : 'சொத்து விபரங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாததால், அவமதிப்பு வழக்கை ஏன் விசாரணைக்கு எடுக்கக் கூடாது' என, நடிகர் விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, 'நீதிமன்றத்தை விட பெரியவர் என நினைக்க வேண்டாம்' என்றும் கண்டித்தார்.
கடன் தொகை
'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை, 'லைகா' நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட, விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், கிடைக்கும் வருவாயை, நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில், 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட், விஷால் நிறுவனம் செலுத்த வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், நீதிமன்ற உத்தரவை, விஷால் நிறைவேற்றவில்லை. இதையடுத்து, 2021 முதல் இப்போது வரைக்குமான, விஷாலின் வங்கி கணக்குகளின் விபரங்களையும், அவருக்கு சொந்தமான சொத்து விபரங்களையும் ஆவணங்களுடனும் தாக்கல் செய்ய, நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
கண்டிப்பு
அதன் பின்னும், வங்கி கணக்கு, சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, விஷால் நேரில் ஆஜராக, நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதி முன் நேற்று விஷால் ஆஜரானார். 'ஆவணங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாததால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது' என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
'நீதிமன்றத்தை விட பெரியவர் என நினைக்க வேண்டாம்; மற்றவர்களைப் போல் தான் நீங்களும் கருதப்படுவீர்கள்' எனவும் நீதிபதி கண்டிப்புடன் கூறினார். வங்கியில் இருந்து ஆவணங்கள் பெற தாமதமாகி விட்டதால், 'ஆன்லைன்' வாயிலாக ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாக, விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
3 கார்கள், ஒரு பைக், இருப்பதாகவும், தந்தையின் கிரானைட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவரது வீட்டுக் கடனையும் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கிகளில் இருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் விபரங்களை அளிக்கவும், விஷால் தரப்புக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை, வரும் 25க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.