'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கானாத்துார் : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நடத்திய தனியார் நிறுவனத்தின் மீது கானாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி இம்மாதம் 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை கானாத்துார் ஆதித்யா ராம் பேலஸ் என்ற தனியார் இடத்தில் நடந்தது. நிகழ்ச்சியை ஏ.சி.டி.சி. ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்தது. போலீசாரிடம் 20000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரியிருந்த நிலையில் 45000க்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தன. அச்சாலையில் வந்த முதல்வரும் வாகன நெரிசலில் சிக்கினார். போலீசார் விசாரணையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பார்வையாளர்களுக்கு அனுமதி சீட்டு விற்றது தெரிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி பார்க்க முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கச்சேரி ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் மீது கானாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பார்வையாளர்களுக்கு முறையான வசதிகள் செய்து தராதது காவல் துறை வழிமுறைகளை மீறி பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக ஐ.பி.சி. 188 406 சட்டத்தின் கீழ் அந்நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.