ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிடிச்சிருக்கு படத்தில் அறிமுகமான விசாகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப்பிறகு தமிழில் முன்னணி நடிகையாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் அவரை தொடர்பு கொண்ட கம்பெனிகளிடம் 50 லட்சம் சம்பளம் கேட்டு பெரிய அதிர்ச்சி கொடுத்தார் நடிகை. அதனால் இது நமக்கு எட்டாத லட்டு என்று விசாகாவை ஓரங்கட்டினர் படாதிபதிகள். அதையடுத்து சந்தானம், பவர்ஸ்டார் உள்ளிட்ட நடிகர்களின் சிபாரிசை நாடினார் நடிகை. அவர்கள் இருந்த பிசியில் அவரை ஏரெடுத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் அப்படத்தில் நாயகனாக நடித்த சேதுவைப்போல விசாகாவும் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தார்.
இந்த சமயம்தான், அஜீத்தை தான் இயக்கும் புதிய படத்திகு ஒரு நடிகை தேடி வந்தார் சிறுத்தை சிவா. விஷயத்தை கேள்விப்பட்ட விசாகா விழுந்தடித்து ஓடினார். சென்றவரை பல கோணங்களில் போட்டோ எடுத்து பார்த்த சிவா, ஓ.கே செய்து விட்டார். அதையடுத்து, அஜீத்துக்குத்தானே ஜோடி என்று அவர் கேட்டபோது, அஜீத்துக்கு ஜோடி இல்லை. ஆனால் ஜோடி மாதிரி என்றாராம். இதனால் குழம்பிப்போன விசாகா, வேறு நடிகை யாரேனும் படத்தில் இருக்கிறார்களா? என்றபோது, தமன்னா இருக்கிற விவரத்தை சொல்லியிருக்கிறார். அப்படின்னா நாம இரண்டாவது நாயகி மாதிரிதான் என்பதை புரிந்து கொண்ட அவர், அஜீத் படத்தில் நடிக்கிறதை வைத்து வேறு படங்களை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் அடக்கஒடுக்கமாக கமிட்டாகி விட்டார்.
அதோடு, என்ன சம்பளம் கேட்கிறீர்கள்? என்று கேட்டபோது, மனசுக்குள் இருந்த 50 லட்சத்தை சொன்னால், கட்அவுட் சொல்லி விடுவார்கள் என்று, நீங்களா பாத்து என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன் என பெருந்தன்மை காட்டினாராம் விசாகா. இதையடுத்து அப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் அவர், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் அஜீத்துக்கு ஜோடியாக தான் நடிப்பதாகவே பெரிய பில்டப் கொடுத்து வருகிறாராம்.