பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் விஷ்ணு, ‛ஆபிஸ், சத்யா மற்றும் சொல்ல மறந்த கதை' என சில ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். தற்போது வேற மாறி ஆபிஸ் என்கிற வலை தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில சீசன்களாகவே இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், அப்போது விஷ்ணுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த சீசனில் விஷ்ணு கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவரது நண்பர்களும் முந்தைய சீசன்களின் போட்டியாளர்களான ரச்சிதா மற்றும் ஷிவினின் சிபாரிசு தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் விஷ்ணு அதில் கலந்து கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.