ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கோ படத்தில் நடித்த கார்த்திகா, அந்தப் படத்தை தொடர்ந்து, மலையாளத்தில், "மகர மஞ்சு என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில்,ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ரவி வர்மாவாக நடிக்க, கார்த்திகா தாசி வேடத்தில் நடித்துள்ளார். வெயிட்டான கதாபாத்திரம் என்பதால், இப்படத்தில் நடிக்கும் முன், தன் மகளுக்கு நிறைய பயிற்சி கொடுத்த ராதா, தாசி வேடத்தில் மற்ற நடிகைகள் நடித்த, சில முக்கிய படங்களையும், கார்த்திகாவுக்கு போட்டு காண்பித்தாராம். அந்த கேரக்டரில், எப்படி நடிக்க வேண்டும் என்றும், டிப்ஸ் கொடுத்தாராம். அதன் பின், கேரக்டரை உணர்ந்து, இயற்கையாக நடித்தாராம் கார்த்திகா. இப்படி அவர் உணர்ச்சிமயமாக நடித்த அப்படம் இப்போது, "அப்சரஸ் என்ற பெயரில், தமிழில் "டப் செய்யப்பட்டு வருகிறது.