2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

குணசித்ர நடிகையாக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் 'ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஒணர், அம்மணி படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கி உள்ள படம் 'ஆர் யூ ஓகே பேபி'. வரும் 22ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அபிராமி, மிஷ்கின், அனுபமா குமார், 'முருகா' அசோக், லட்சுமி ராமகிருஷ்ணன், 'ஆடுகளம்' நரேன், பாவெல் நவகீதன், ரோபோ சங்கர், வினோதினி வைத்தியநாதன், கலைராணி, முல்லையரசி உள்பட நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைக்க, டி.எஸ்.கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன் நான் இயக்கிய படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகள் தத்தெடுப்பு குறித்தும், அதற்குப் பிறகான சட்டரீதியான பிரச்னைகள் குறித்தும் இப்படம் விரிவாகப் பேசுகிறது. ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களை பற்றிய விவாதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை கண்டிப்பாக இந்த சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய ஒன்று. என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.