பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் |
ஹாலிவுட்டில் வெளியான ஹேங் ஓவர் படம் புகழ்பெற்றது. நன்றாக குடித்து விட்டு செய்யும் சேட்டைகளையும், அதனால் வரும் சிக்கல்களையும் சொல்லும் படம். இது பல பாகங்களாக வெளிவந்துள்ளது. இதுபோன்ற ஒரு கதை களத்தில் உருவாகும் படம் 'எனக்கு என்டே கிடையாது'. கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகிறது.
அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோக்களில் ஒருவருமான கார்த்திக் கூறும்போது, “தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே படம் பார்ப்பவர்களை கதைக்குள் இழுத்து சென்றுவிடும். இந்த படம் ஒரு வீட்டிற்குள்ளேயே நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அதிக காட்சிகளில் மது பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்வதற்கு அப்படிப்பட்ட காட்சிகள் தேவைப்பட்டது. எந்த ஒரு மெசேஜையும் இந்த படத்தின் மூலமாக நாங்கள் வலிந்து சொல்லவில்லை” என்கிறார்.