‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத்கான். இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் வெளியான 'லவ் டுடே' படத்தின் ரீமேக் ஆகும். இதில் ஜூனைத்கான் ஜோடியாக ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜூனைத்கான் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுனில் பாண்டே இயக்கும் இந்த படம் காதல் கதை என்று கூறப்படுகிறது.
வட இந்திய இளைஞன் ஒருவனுக்கும்,தென்னிந்திய பெண்ணுக்கமான காதல் கதை என்கிறார்கள். எல்லை, மொழி கடந்து காதல் பேசும் இந்த படம் இன்றைய சூழ்நிலையில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே பல பாலிவுட் பட வாய்ப்புகளை மறுத்து வந்த சாய்பல்லவி, இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு செல்கிறார். இந்த படத்தையும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிறார்கள்.